பொன்னேரி, நவ. 6: பொன்னேரியில் இருந்து கோயம்பேடு செல்வதற்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததன் காரணமாக
நாள்தோறும் கோயம்பேடு, அண்ணாநகர், கொளத்தூர், ரெட்டை ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
÷திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பேரூராட்சியில் 30-ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அத்துடன் பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ÷பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள கிராமங்கள் மற்றும் பொன்னேரி நகரினுள் வசிக்கும் மக்கள் சென்னை கடற்கரை, சென்னை சென்ட்ரல், பூக்கடை, திருவொற்றியூர், வண்ணாரப்பட்டை, ராயபுரம், கொருக்குப்பேட்டை, பேசின்பாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயிலில் சென்று வருவர்.
÷இதே போன்று கோயம்பேடு, வடபழனி, தாம்பரம், கிண்டி, கொளத்தூர், ரெட்டைஏரி, அண்ணாநகர், பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பொன்னேரியில் இருந்து பஸ் மூலம் சென்றால் மட்டுமே மேற்கண்ட பகுதிகளுக்கு விரைவாக செல்ல முடியும் என்ற நிலை
உள்ளது.÷இதனால் கோயம்பேடு, அண்ணாநகர், தாம்பரம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கோயம்பேட்டில் உள்ள பழங்கள், காய்கறி, மற்றும் பூ மார்கெட்டுகளுக்கு செல்லும் வியாபாரிகள், பொன்னேரியில் இருந்து கோயம்பேடுக்கு இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட பஸ்களில் சென்று வருகின்றனர்.
÷உள்ளூர் மக்கள் அவதி... பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்துப் பணிமனையில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவைகளில் ஓட்டை, உடைசல், ஒழுகும் நிலையில் இருக்கும் பஸ்கள் பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படுகிறது.
÷இதில் நன்கு இயங்கக்கூடிய நிலையில் இருக்கும் பஸ்கள் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்சி ஆகிய வெளிமாவட்டங்களுக்கும், புதுச்சேரி, திருப்பதி, ஆகிய வெளிமாநிலங்களுக்கும் இயக்கப்படுகிறது.
÷காலையில் பொன்னேரியில் இருந்து கோயம்பேடு செல்லும் பஸ் அதன் பின்னர் கோயம்பேடு-திருப்பதி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதே போன்று பொன்னேரியில் இருந்து கோயம்பேடு செல்லும் மற்றொரு பஸ் அதன் பின்னர் அங்கிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படுகிறது.
÷அத்துடன் பொன்னேரியில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் பஸ்ஸில் கோயம்பேடு வரை மட்டுமே பயணி கள் செல்கின்றனர். அதன் பின்னர் கோயம்பேட்டில் இருந்துதான் திருச்சிக்கு அந்த பஸ்ஸில் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
÷பொன்னேரியில் இருந்து கோயம்பேடுக்கு பல்வேறு அலுவல் காரணமாக நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யும் நிலையில் அதற்கேற்ப பஸ்கள் இயக்கப்படாததன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் செங்குன்றம் சென்று அங்கிருந்து கோயம்பேடு செல்லும் நிலை உள்ளது.
÷மேலும் கோயம்பேடுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பொன்னேரி பஸ் நிலையத்தில் கோயம்பேடு செல்வதற்கு நோயாளிகள், வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட பயணிகள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
÷எனவே பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வரும் பஸ்களை ரத்து செய்து, அப்பஸ்களை பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள பழவேற்காடு, மீஞ்சூர், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி மற்றும் கோயம்பேடுக்கு இயக்க விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின்
வேண்டுகோளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தற்கொலை செய்திருப்பேன்... விஜய்குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

