கள்ளக்குறிச்சி, ஜன. 8: கள்ளக்குறிச்சியில் ராம பக்தர் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நாம சங்கீர்த்தனை கோஷ்டியுடன் சென்று பக்தி பரவசத்தை சிறுவர்களுடன் செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி அரசு வழக்கறிஞர் க.ரங்கராஜன் தந்தை என்.கண்ணன் பாகவதர் பஜனை குழுவினருடன் சுமார் 30 வருடங்களாக வருடந் தோரும் பாகவதர்களை அழைத்து நாலியிர திவ்விய பிரபந்தத்தை பல வருடங்களாக சேவித்து வருகிறார். கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் முன்பு உள்ள பஜனை மடத்தில் நாம சங்கீர்த்தனை பஜனையும் காலை 4 மணியளவில் நடந்து வருகிறது.
இவர் சிறுவர் சிறுமிகளிடையை இளம் வயதில் ராம பக்தியை ஏற்படுத்தி வருகிறார். வருடந்தோரும் மார்கழி மாதத்தில் தேரோடும் வீதியின் வழியாக சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை அழைத்துக் கொண்டு நாமசங்கீர்தன பஜனை செய்து வருகிறார்.
அதிகாலையே குளித்து நீராடி பஜனை மடத்தில் விளக்கேற்றி வைத்து கோவிந்தராஜ பெருமாளை தரிசனம் செய்த பின் தேரோடும் வீதிகளின் நாமசங்கீர்தன பஜனை இசைக் கருவிகளை ஒளித்துக் கொண்டு செய்து வருகிறார்.
சில வீடுகளில் பெருமாள் பக்தர்கள் இளஞ்சிரார்களுக்கு எழுதுகோல், நோட்டு உள்ளிட்டவற்றை மாணவர்கள் பயன் பெரும் வகையில் அளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.