ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வின் கண்கள் தானம்

கள்ளக்குறிச்சி,  ஜன. 8:  கள்ளக்குறிச்சியை அடுத்த சோமண்டார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. சோ.கலிதீர்த்தான்பிள்ளை (75). இவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இவரது கண்களை அவரது மக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கள்ளக்குறிச்சி,  ஜன. 8:  கள்ளக்குறிச்சியை அடுத்த சோமண்டார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. சோ.கலிதீர்த்தான்பிள்ளை (75). இவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இவரது கண்களை அவரது மகன் மருத்துவர் க.காமராஜிடம் கள்ளக்குறிச்சி அரிமா சங்க செயலாளர் ஜி.ஸ்ரீதர் மற்றும் சங்க உறுப்பினர்கள் தானமாக கேட்டனர். அவர்களது ஒப்புதலின் பேரில் மாவட்ட தலைமை கண் மருத்துவர் எஸ்.நேரு கண்களை அகற்றினார். கண்களை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் எஸ்.சண்முகசுந்தரம், க.பழமலை, ப.நாவுக்கரசு, ஜி.எஸ்.குமார் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள், செய்தித்தாள் முகவர் எஸ்.பி.செங்கமலம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள், அதிமுக கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.