நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாசனத்துக்கு போதிய நீரின்றி அல்லல்படும் கடலூர் மாவட்ட டெல்டா விவசாயிகள்

சிதம்பரம், ஜூலை 13: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் உள்ள காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு போதிய நீரின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:16 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், ஜூலை 13: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் உள்ள காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு போதிய நீரின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர் திறந்துவிடவில்லை. தற்போது சம்பா சாகுபடிக்கு நாற்றாங்கால் பணிக்கும் தண்ணீர் திறந்துவிடப்படாததால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறுவை சாகுபடிக்கு ஜூன் 6-ம் தேதியே முன்கூட்டியே மேட்டூரிலிருந்து நீரை திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.  அதனடிப்படையில் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணை வந்தது. ஆனால் கீழணையில் பாலம் மற்றும் ஷட்டர் சீரமைப்பு பணியை காரணம் காட்டி கல்லணையிலிருந்து உடனடியாகத் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. பின்னர் கல்லணையிலிருந்து கீழணைக்கு நீர் திறந்துவிடப்பட்டு சுமார் நான்கரை அடி நீர் தேக்கி வைக்கப்பட்டது. கீழணையின் மொத்தக் கொள்ளவு 9 அடியாகும்.

 இந்நிலையில் கடந்த ஜூலை 29-ம் தேதி அவசர, அவசரமாக பெயரளவிற்கு அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செல்விராமஜெயம் ஆகியோரால் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டது. அந்த நீர் வந்து அணைக்கு அருகில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு வந்து சேரவே ஒருவார காலமானது.

 இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக வறண்டு கிடந்த வீராணம் ஏரியில் தற்போது 43 அடி (மொத்தக் கொள்ளளவு 47.50) நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.  ஏரியிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவில்லை, தற்போது நடவுள்ள சம்பா சாகுபடிக்கு நாற்றாங்கல் நடுவதற்கும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. ஆனால் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்துக்கு ஜூலை 10-ம் தேதி முதல் விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, கொள்ளிடம் இடதுகரை பலப்படுத்தும் பணிக்காக வீராணம் ஏரியிலும், பொன்னேரியிலிருந்தும் மண் எடுóப்பதால் குறுவை சாகுபடிக்கு நீர் திறந்து விடப்படவில்லை.  தற்போது சம்பா சாகுபடிக்கு நீர் திறந்துவிடும்படி விவசாயிகள் யாரும் கேட்கவில்லை என தெரிவித்தார்.

 ஆனால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடத்திய கூட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்திலும் தமிழக உழவர் முன்னணி சார்பில் எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் கோரிக்கை விடப்பட்டது என அம்முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தெரிவித்தார்.

 ரூ. 108 கோடி செலவில் அணைக்கரையில் உள்ள கீழணை தடுப்பிலிருந்து சிதம்பரத்தை அடுத்த சின்னக்காரமேடு வரை சுமார் 60 கி.மீட்டர் தூரத்துக்கு கொள்ளிடம் இடதுகரை பலப்படுத்தும் பணிக்கு வீராணம் ஏரி மற்றும் பொன்னேரியிலிருந்து பெயரளவிற்கே மண் எடுக்கப்படுகிறது. ஆனால் கொள்ளிடத்தின் அருகே உள்ள வாய்க்காலிருந்தே மண் எடுத்து கரை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். இவர்கள் போர்வெல் மூலம் அதிக செலவு செய்து சாகுபடி செய்து மிகுந்த வேதனையில் உள்ளனர். தற்போது சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் நடுவதற்காவது தண்ணீர் திறக்கப்படும் என எதிர்ப்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பெயரளவிற்கு திறக்கப்பட்ட நீர் போதுமானதல்ல என்றும், வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு இதுவரை நீர் திறந்துவிடவில்லை. இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு பெற வேண்டிய நீரை பெற வேண்டும் அல்லது மழை பெய்தால்தான் விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்காவது போதுமான நீர் கிடைக்கும். எனவே தமிழக அரசு, கர்நாடக அரசிடம் பெற வேண்டிய உரிய நீரை பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலர் சி.ஆறுமுகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.