கடலூர், அக். 8: அரசு ஊழியர்களைப்போல் தங்களுக்கும், ஓய்வூதியத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, பாட்டாளி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடலூரில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வேலு வரவேற்றார்.
நவீன அரிசி ஆலைகளில் காலியாக இருக்கும் 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி பணி மாறுதல் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக மணிமாறன் தேர்ந்து எடுக்கப்பட்டார். துணைப் பொதுச் செயலாளர்களாக சுப்பிரமணியன், பெருமாள், குமார், கருணாமூர்த்தி, திருவேங்கடம் ஆகியோரும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








