மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஒரே பதிவு எண்ணில் இரு லாரிகள்: டிரைவரிடம் விசாரணை

திருவள்ளூர், அக். 8: திருவள்ளூர் அருகே ஒரே பதிவு எண் கொண்ட இரு மணல் லாரிகளை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.  திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் பகுதியில் எஸ்.ஐ. முத்துகுமரன் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈட

Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

திருவள்ளூர், அக். 8: திருவள்ளூர் அருகே ஒரே பதிவு எண் கொண்ட இரு மணல் லாரிகளை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.

 திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் பகுதியில் எஸ்.ஐ. முத்துகுமரன் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மணல் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியில் உள்ள குவாரியில் இருந்து மணல் எடுத்துச் செல்வதாக லாரி டிரைபர்கள் கூறினர். அப்போது இரு லாரிகளுக்கு ஒரே பதிவு எண் (டி.என்.23.பி.9027) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸôர், லாரிகளின் பதிவு புத்தகங்களை சோதனை செய்தனர். அதில் ஒரு லாரி கர்நாடக மாநில பதிவு எண் என்பது தெரியவந்தது. இதையடுத்து பதிவு எண் சரியாக இருந்த லாரியை விடுவிக்கப்பட்டது. போலி எண் கொண்ட லாரியை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.

 பின்னர் லாரியின் டிரைவர் அரக்கோணத்தை அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியின் மகன் சந்திரன் (28) என்பவரை கைது செய்து உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.