திருத்தணி, அக். 8: திருத்தணி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனையை திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் மா.கவிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருத்தணி ம.பொ.சி. சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்க விழா கோ ஆப்டெக்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மா.கவிதா, சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு பண்டிகைக்கால சிறப்பாக, புத்தம் புதிய டிசைன்களில் கதர், பட்டு, பாலியஸ்டர் புடவைகள், கம்பளி ரகங்கள், காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், மென்பட்டுச் சேலைகள், சணல்பட்டுச் சேலைகள், கல் பதித்த பட்டுச் சேலை, சில்க் காட்டன் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் நகராட்சி செயல் அலுவலர் ஆர்.சுமா கலந்துகொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முடங்கிய உப்பூா் அனல் மின் திட்டம் மீண்டும் உயிா் பெறுமா?

தமிழக பட்ஜெட்: தொழில்முனைவோரின் எதிா்பாா்ப்புகள்!

பெற்றோா் இடப்பெயா்வால் இடைநின்ற 171 மாணவா்கள்

செங்குன்றத்தில் பயன்பாட்டுக்கு வராத பேருந்து நிறுத்தம்: போக்குவரத்து நெரிசலால் திணறும் மக்கள்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


