தடகளப் போட்டிகள் இன்று தொடக்கம்

விழுப்புரம், பிப். 10: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் உலகத் திறனாய்வு கண்டறியும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு தடகள விளையாட்டுப் போட்டிகள் 11-ம் தேதி தொடங்கி 2 நா
Published on
Updated on
1 min read

விழுப்புரம், பிப். 10: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் உலகத் திறனாய்வு கண்டறியும் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு தடகள விளையாட்டுப் போட்டிகள் 11-ம் தேதி தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

÷அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

÷திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்கு வானூர் வட்டம் எறையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 11-ம் தேதியும், விழுப்புரம் கல்வி மாவட்டத்திற்கு மாவட்ட விளையாட்டரங்கில் 12-ம் தேதியும் நடைபெறுகிறது.

÷இப்போட்டிகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இதில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம். இதில் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போன்ற போட்டிகள் நடைபெறும்.

÷போட்டிகளில் வெற்றி பெறுவோர் மண்டல போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகள் விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயன் பெறலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com