புயலால் சரிந்த பன்னீர் கரும்பு விலை வீழ்ச்சி
சிதம்பரம், ஜன. 5: கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பன்னீர் கரும்பு பயில், புயலில் முற்றுலுமாக பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப


சிதம்பரம், ஜன. 5: கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பன்னீர் கரும்பு பயில், புயலில் முற்றுலுமாக பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் வல்லம்படுகை, கடவாச்சேரி, அத்திப்பட்டு, பழஞ்சநல்லூர், வேளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்பு பயிரிட்டிருந்தனர்.
பொங்கல் பண்டிகைக்காக அறுவடை செய்யப்படும் இந்த கரும்புகள், சென்னை, வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும், ஆந்திர மாநிலத்திற்கும் விற்பனைக்காக, வியாபாரிகள் லாரிகள் மூலம் ஏற்றிச் செல்வது வழக்கம்.
நடப்பாண்டு கடலூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பன்னீர் கரும்பு புயலில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
20 கழிகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு, ரூ.250-க்கு கடந்த ஆண்டு விற்பனையானது. இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை விவசாயிகள் லாபமடைந்தனர். இந்த ஆண்டு கரும்புகள் அனைத்தும் சாய்ந்தும், உடைந்தும் போனதால், கட்டு ரூ.60 முதல் ரூ.150 வரை மட்டுமே கொடுத்து வியாபாரிகள் வாங்க முன்வந்துள்ளனர். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு சிதம்பரத்தில் ஒரு கரும்பு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பற்றாக்குறை காரணமாக கரும்பு விலை கடுமையாக உயரக்கூடும் எனத் தெரிகிறது.
வாழை மரங்கள் பற்றாக்குறை: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாழை மரங்களும் புயலால் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனால் திருமணம் மற்றும் வைபவங்களுக்கு பந்தலில் கட்ட வாழை மரங்கள் கிடைக்கவில்லை. மேலும், ஹோட்டல்களுக்கு வாழை இலை கிடைக்காததால் பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்துகின்றனர். எனவே வெளி மாவட்டங்களிலிருந்து வாழை இலைகளை கடலூர் மாவட்டத்தில் சந்தைக்கு விற்பனை கொண்டு வர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...