ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

சுரங்க விபத்தில் என்எல்சி பொறியாளர் சாவு

நெய்வேலி, ஆக. 8: என்எல்சி முதல் சுரங்கத்தில் புதன்கிழமை நடந்த விபத்தில் பொறியாளர் செந்தில்குமார் (42) அதே இடத்திலேயே இறந்தார்.  ÷நெய்வேலி வட்டம் 7-ல் வசித்து வரும் பொறியாளர் செந்தில்குமார் என்எல்சி மு

Published On :

நெய்வேலி, ஆக. 8: என்எல்சி முதல் சுரங்கத்தில் புதன்கிழமை நடந்த விபத்தில் பொறியாளர் செந்தில்குமார் (42) அதே இடத்திலேயே இறந்தார்.

 ÷நெய்வேலி வட்டம் 7-ல் வசித்து வரும் பொறியாளர் செந்தில்குமார் என்எல்சி முதல் சுரங்கத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

 ÷இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் இரவுப் பணிக்குச் சென்ற அவர், பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் இயந்திரத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து, பழுப்பு நிலக்கரி குவியலில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

 ÷இது குறித்து தகவலறிந்த சுரங்கத் துறை அதிகாரிகள் காவல்துறைக்கு புகார் செய்ததைத் தொடர்ந்து, நெய்வேலி தெர்மல் போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 ÷இறந்த செந்தில்குமாரின் உடலுக்கு, என்எல்சி திட்டம், செயலாக்கம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் ஆர்.கந்தசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.