புதிய மின்மாற்றி :ஆண்டிப்பாளையம் கிராமத்தினர் கோரிக்கை

விழுப்புரம், செப். 5: விழுப்புரத்தில் மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆண்டிப்பாளையம் கிராமத்துக்கு மின்மாற்றி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். ÷விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையில்

விழுப்புரம், செப். 5: விழுப்புரத்தில் மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆண்டிப்பாளையம் கிராமத்துக்கு மின்மாற்றி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

÷விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையில் அமைந்துள்ள மின்வாரியத் துறையின் மேற்பார்வைப்  பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.

÷இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி மேற்பார்வைப் பொறியாளர் மு.அசோகனிடம் கொடுத்தனர்.  ÷இதில் ஐஸ் பேக்டரி வைப்பதற்கு ஒருவரும், வீட்டுக்கு மின் இணைப்பு கோரி 4 பேரும், தாற்காலிகமாக கட்டியப் பணத்தை திரும்பக் கோரி ஒருவரும், விவசாய மின் இணைப்பு கேட்டு 4 பேரும், மின்மாற்றி அமைக்க இரு கிராமத்திலிருந்தும் மனுக்கள் பெறப்பட்டதாக தெரிவித்தனர்.

÷இதில் கண்டமங்கலம் ஒன்றியத்தில் மதுரப்பாக்கம் மின் நிலையப் பகுதியில் சித்தலம்பட்டு அருகே உள்ள சேஷங்கனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட எஸ்.ஆண்டிப்பாளையம் கிராமத்தில் பல ஆண்டுகளாக ஒரேயொரு மின்மாற்றி மட்டும் இருப்பதால் அடிக்கடி மின் இழப்பு ஏற்படுவதாகவும், இந்த மின்மாற்றி மூலம் 35 விவசாய பம்புகளுக்கும், மூன்று ஊராட்சி குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார்களுக்கும், கிராமத்திலிருக்கும் 200 வீடுகளுக்கும் இதிலிருந்துதான் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

÷ஆதலால் அடிக்கடி மின் குறைபாடுகள் ஏற்படுவதாக பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மனு அளிக்க வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com