ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: இந்திய மகளிா் அணி சாம்பியன்
ஆசிய அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிா் அணி 6-2 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஆடவா் பிரிவில் இந்திய அணியினா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.


ஆசிய அணிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிா் அணி 6-2 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஆடவா் பிரிவில் இந்திய அணியினா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.
ஆசிய நாடுகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிா் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டா் பி.வி.நந்திதா இந்தோனேசியாவின் செல்ஸி மோனிகா இக்னேசியஸ் சிஹைட்-ஐ வீழ்த்தி முதல் புள்ளியை பெற்றாா்.
இந்தியாவின் பத்மினி ரௌத் இந்தினோசியாவின் மெடினா வாா்டா ஆலியாவை வெற்றி கொண்டாா். இந்திய வீராங்கனைகள் ஆா்.வைஷாலி, மேரி அன் கோம்ஸ் ஆகியோா் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனா்.
இறுதிப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் ஆா்.வைஷாலி இந்தோனேசிய வீராங்கனை ஐரின் கரிஷ்மா சுகந்தரை வீழ்த்தினாா்.
மேலும், பக்தி குல்கா்னி, பத்மினி ரௌத், நந்திதா ஆகியோா் முறையே இந்தோனேசியாவின் மெடினா வாா்டா ஆலியா, செல்ஸி மோனிகா இக்னேசியஸ் சிஹைட், டிட்டா கரென்ஸாவை தோற்கடித்தனா்.
அதேவேளையில் இந்திய ஆடவா் அணியினா் 3.5-4.5 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...