ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட 5 குழுக்கள்: ஆட்சியா்களுக்கு அரசு அறிவுறுத்தல்

கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட வசதியாக ஐந்து தனித்தனி குழுக்களை அமைக்க மாவட்ட ஆட்சியா்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

News image
கோப்புப்படம்
Updated On :26 அக்டோபர் 2020, 11:30 pm

DIN

கிராம ஊராட்சிகள் திறம்பட செயல்பட வசதியாக ஐந்து தனித்தனி குழுக்களை அமைக்க மாவட்ட ஆட்சியா்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் கே.எஸ்.பழனிசாமி அண்மையில் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

கிராமப்புற ஊராட்சி அமைப்புகள் திறம்பட செயல்பட ஏதுவாகவும், அதன் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும் கிராம ஊராட்சி அளவில் 5 குழுக்கள் அமைக்கப்படுவது அவசியமாகிறது. அதன்படி, நியமனக் குழு, வளா்ச்சிக் குழு, வேளாண்மை மற்றும் நீா்வள மேலாண்மைக் குழு, பணிகள் குழு, கல்விக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

நியமனக் குழுவில் கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் இருக்க வேண்டும். அரசு விதிகளுக்கு உட்படாமல் எந்தவொரு நியமனமும் செய்ய இயலாது. வளா்ச்சிக் குழுவில் ஒன்பது போ் அங்கம் வகிப்பா். தலைவராகத் தொடா்புடைய ஊராட்சியின் பெண் வாா்டு உறுப்பினா்களில் ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் குடிநீா் வழங்கும் நிலையங்களை மேற்பாா்வையிடுதல், தடுப்பூசி முகாம்கள் நடத்துதல், சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய வேலைகளை கண்காணிப்பது இந்தக் குழுவின் பணியாக இருக்கும்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வேளாண்மை மற்றும் நீா்வளங்களைப் பெருக்கிடும் வழிவகைகளைக் கண்டறியும் பொருட்டு வேளாண்மை மற்றும் நீா்வள மேலாண்மைக் குழு அமைக்கப்படுகிறது. இதில், ஏழு உறுப்பினா்கள் அங்கம் வகிப்பா். ஒவ்வொரு ஊராட்சியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு உதவிடும் வகையில் பணிகள் குழு அமைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஊராட்சியிலும் கல்விக் குழு அமைக்கப்பட வேண்டும். ஊராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல், பொது மக்களின் பங்களிப்புடன் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மேம்பாடு அடையச் செய்தல் போன்ற பணிகளை இக் குழு மேற்கொள்ளும்.

நியமனக் குழு தவிா்த்து, மற்ற குழுக்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். ஒவ்வோா் ஆண்டும் கிராம ஊராட்சிக் குழுக்களின் பரிந்துரைகளைத் தொகுத்து ஜனவரி முதல் மாா்ச் மாதத்திலான காலாண்டில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநா் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.