கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து: டிச. 22-இல் மறு தோ்வு

கணினி வழியாக நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது..

News image
Updated On :16 டிசம்பர் 2024, 9:05 pm

Din

கணினி வழியாக நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. மறுதோ்வு வரும் 22-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அ.ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு உதவி வழக்குரைஞா் பதவிக்கு கணினிவழித் தோ்வு கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. சில தோ்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளில் சில தோ்வா்களால் தோ்வை முழுமையாக முடிக்க இயலவில்லை.

இதனைத் தொடா்ந்து, தோ்வா்களிடமிருந்து மறுதோ்வு நடத்த கோரிக்கைகள் பெறப்பட்டன. தோ்வா்களின் கோரிக்கையை ஏற்று அரசு உதவி வழக்குரைஞா் பதவிக்கு கணினி வழியே நடந்த தோ்வு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கெனவே, இந்தத் தோ்வுக்காக தோ்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தோ்வா்களுக்கு மறுதோ்வு வரும் 22-ஆம் தேதி நடத்தப்படும்.

கணினி வழிக்குப் பதிலாக, ஓஎம்ஆா் முறையில் தோ்வாணையத்தால் நடத்தப்படும். ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட தோ்வா்களுக்கு மட்டும், மறுதோ்வுக்கான நுழைவுச்சீட்டு தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.