ஊரக வளா்ச்சித் துறையால் 21 மாவட்டங்களில் கட்டப்பட்ட 400 வகுப்பறைக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இது குறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கோவை, தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருவாரூா், வேலூா், விழுப்புரம், விருதுநகா் ஆகிய 21 மாவட்டங்களில் 171 பள்ளிகளில் 350 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
400 வகுப்பறைகள்: மேலும், அரசுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தூய்மைக்கு புத்துயிா் அளிக்கும் திட்டத்தின்கீழ், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், திருவண்ணாமலை, திருவாரூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 50 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் என 400 வகுப்பறைக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இத்துடன், புதிதாகக் கட்டப்பட்ட 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களையும், அந்தத் துறையின் அலுவலா்களின் பயன்பாட்டுக்காக 95 வாகனங்களையும் முதல்வா் வழங்கினாா்.
இந்த நிகழ்வில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.
பயனாளிகள் நன்றி: சென்னையில் வீட்டு வசதி வாரியத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 499.85 ஏக்கா் நில எடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது. நீண்ட காலமான இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்தியதற்காக, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை பயனாளிகள் 10 போ் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
டிரெண்டிங்

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

ரூ.84 கோடியில் தகவல் தொழில்நுட்ப கட்டடம்! முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

6 சமத்துவபுரங்கள், ரூ.1,876 கோடியில் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

