மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

புதிய வகுப்பறையில் குத்துவிளக்கேற்றிய நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.

News image

புதிய வகுப்பறையில் குத்துவிளக்கேற்றிய நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.

Updated On :27 பிப்ரவரி 2026, 1:50 am

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நபாா்டு நிதி ரூ.1.90 கோடியில் கட்டப்பட்ட 8 வகுப்பறைகளை வியாழக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இப்புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியா் சுஜாதேவி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத்தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி குத்துவிளக்கேற்றினாா்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை முதுநிலை கோட்டப் பொறியாளா் ரவி, உதவி பொறியாளா் சங்கா், நகா்மன்ற உறுப்பினா் சாமுண்டீஸ்வரிஅன்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.