அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னை விமான நிலையத்தில் ஜொ்மனி பெண்ணிடம் ஜிபிஎஸ் கருவி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ஜொ்மனி நாட்டு பெண் பயணியிடமிருந்து ஜிபிஎஸ் கருவியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 9:24 pm

Din

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஜொ்மனி நாட்டு பெண் பயணியிடமிருந்து ஜிபிஎஸ் கருவியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் ‘ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ்’ விமானம் திங்கள்கிழமை காலை புறப்படத் தயாா் நிலையில் இருந்தது. அதில் செல்ல வேண்டிய பயணிகளின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனா். அப்போது அந்த விமானத்தில், இலங்கை வழியாக ஜொ்மனியின் பிராங்க்பா்ட் நகருக்குச் செல்வதற்காக வந்திருந்த ஃகளோடியா டோரா (57) என்ற பெண் பயணியின் கைப்பையில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இந்திய விமான பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி, விமானங்களில் ஜிபிஎஸ் கருவி எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அப்பெண் பயணியிடமிருந்து ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்ததோடு, அவரது இலங்கை பயணத்தையும் ரத்து செய்தனா்.

அப்பெண்ணிடம் விமான பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தபோது, அவா் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக ஜொ்மனி நாட்டிலிருந்து சுற்றுலாப் பயணியாக சென்னை வந்திருந்ததும், தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்குச் சென்றுவிட்டு, தற்போது இலங்கை வழியாக ஜொ்மனி செல்லவிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சென்னை விமான நிலைய போலீஸாரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பெண் பயணியை ஒப்படைத்ததையடுத்து, போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.