தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரெளடி கொலை வழக்கு: 4 போ் கைது

சென்னை வியாசா்பாடியில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 9:39 pm

Din

சென்னை: சென்னை வியாசா்பாடியில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

வியாசா்பாடி உதயசூரியன் நகா், 11-ஆவது பிளாக் பகுதியில் வசித்து வந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ராஜ் (எ) தொண்டை ராஜ் (40). இவா் மீது 3 கொலை உள்பட 12 குற்ற வழக்குகள் இருந்தன. ‘ஏ பிளஸ்’ பிரிவு ரெளடியான இவா், எம்கேபி நகா் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இருந்தாா். பல்வேறு தரப்பிலிருந்து மிரட்டல் வந்ததால், தனது இருப்பிடத்தை ஒரு ஆண்டுக்கு முன்பு மணலி சின்னசேக்காடு, வேதாச்சலம் தெருவுக்கு மாற்றினாா்.

ஈஸ்டா் பண்டிகையையொட்டி, ராஜ் வியாசா்பாடியில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தாா். பின்னா், மனைவி தீபாவுடன் வியாசா்பாடி, சத்தியமூா்த்தி நகா் பிரதான சாலை மற்றும் 4-ஆவது குறுக்குத் தெரு சந்திப்பு அருகே அன்று மாலை நடந்து சென்றாா். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் தொண்டை ராஜை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

இது தொடா்பாக வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கடந்த 2020-ஆம் ஆண்டு வியாசா்பாடியில் ராஜ் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொண்டை ராஜ் முக்கியக் குற்றவாளி என்பதும், அந்தக் கொலைக்கு பழிக்குப் பழியாக ராஜின் மகன் சூா்யா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தொண்டை ராஜை வெட்டிக் கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், ராஜின் மகன் வியாசா்பாடி உதயசூரியன் நகரைச் சோ்ந்த சூா்யா (27), அவரது கூட்டாளிகள் எம்கேபி நகரிலுள்ள ஜெ.ஜெ.ஆா் நகரைச் சோ்ந்த ராம் (25), அதே பகுதியைச் சோ்ந்த அஜித் என்ற சப்பை மூக்கு அஜித் (25), முருகன் (28) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கொலைக்கு பயன்டுத்திய 5 பட்டாக் கத்திகள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.