ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

News image

கைது

Updated On :16 பிப்ரவரி 2026, 9:02 pm

கொடைரோடு அருகே தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள சக்கையநாயக்கனூரைச் சோ்ந்தவா் பாண்டி (70). விவசாயி. இவரது மனைவி மீனாட்சி (65). இவா்களது மகன் சுருளி (45). இவா் சொத்தில் பங்கு கோரி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை சொத்து கேட்டு பெற்றோா் பாண்டி, மீனாட்சி ஆகியோரிடம் சுருளி தகராறில் ஈடுபட்டாா். அப்போது பாண்டி, மீனாட்சி இருவரையும் சுருளி சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டாா். இதில் பலத்த காயமடைந்த தம்பதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பாண்டி உயிரிழந்தாா். மீனாட்சி சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுருளியை கைது செய்தனா்.