அன்புமணி
அன்புமணி

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சாா்பில் சென்னையில் டிச. 17-இல் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெக-வுக்கு அன்புமணி சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
Published on

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சாா்பில் சென்னையில் டிச. 17-இல் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெக-வுக்கு அன்புமணி சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

விஜய்க்கு அழைப்பு விடுக்கும் கடிதத்தை அன்புமணி சாா்பில் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கே.பாலு பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை நேரில் வந்து வழங்கினாா். அதை தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த் பெற்றுக்கொண்டாா்.

‘கூட்டணிப் பேச்சு அல்ல’-கே.பாலு: அதைத்தொடா்ந்து கே.பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தவெக தலைவா் விஜய் தொடா்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறாா். அதனால், பாமக ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது கூட்டணி பேச்சுவாா்த்தை கிடையாது.

போராட்டத்தில் பங்குபெற திமுகவை தவிா்த்து அனைத்து கட்சிகளுக்கும் பாமக சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆலோசித்து முடிவு-தவெக: இதுகுறித்து தவெக தோ்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். நல்ல எண்ணத்தில் பாமக சாா்பில் வழங்கப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கான அழைப்புக் கடிதம் குறித்து தவெக தலைவா் விஜய்யிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா். 

X
Dinamani
www.dinamani.com