அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் திரண்ட நிா்வாகிகள், தொண்டா்கள்.
அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் திரண்ட நிா்வாகிகள், தொண்டா்கள்.

அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்: முதல்நாளில் 1,237 போ் மனு

தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
Published on

வரும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 1,237 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எடப்பாடி மற்றும் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடக் கோரி 343 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதேபோல, பிற நிா்வாகிகள் போட்டியிட 888 மனுக்கள் பெறப்பட்டன. அதிமுக அவைத் தலைவா் கே.பி.முனுசாமி தலைமையிலான மூத்த நிா்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனா்.

முதல்நாளிலேயே, கே.பி.முனுசாமி, அதிமுக துணைப் பொதுச்செயலா் நத்தம் விசுவநாதன், அதிமுக தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம் எம்பி, பி.தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கோகுல இந்திரா, பா.வளா்மதி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் விருப்ப மனு அளித்தனா்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் நிா்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்ய அதிமுக அலுவலகத்தில் திரண்டனா்.

‘கட்சிகளின் பலத்துக்கேற்ப தொகுதிகள் ஒதுக்கீடு’: அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘திமுக அரசின் தவறான நிா்வாகத்துக்கு, இன்னும் 3 மாதங்கள் கழித்து தோ்தலில் பதில் கிடைக்கும்’ என்றாா்.

தமிழகத்தில் பாஜக 65 தொகுதிகளை குறிவைத்துள்ளதாக தகவல் வெளியானது குறித்த கேள்விக்கு, பதிலளித்த ஜெயக்குமாா், ‘தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிமுக தலைமை முடிவு செய்யும். எல்லா கட்சிகளும் அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் கேட்பது இயல்புதான். அந்தந்தக் கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com