கடவுச்சீட்டு அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நேர மாற்றம்

சென்னை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான நேரம் மாற்றம்
Published on

சென்னை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி விஜயகுமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் ‘உங்கள் மண்டல கடவுச்சீட்டு அதிகாரியைச் சந்தித்து உரையாடுங்கள்’ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, செவ்வாயக்கிழமை (டிச. 16) அன்று மட்டும் சந்திப்பு நிகழ்ச்சி வழக்கமான நேரமான காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை என்பதற்குப் பதிலாக, பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com