சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 5 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தமிழகத்தில் சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

தமிழகத்தில் சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சைபா் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் அல்லாமல், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டைச் சோ்ந்தவா்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

அண்மையில் தமிழகத்தில் சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தானை சோ்ந்த 2 போ் மாநில சைபா் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனா். அதேபோல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் சைபா் மோசடி கும்பலுக்கு ஆள்களை அனுப்பி வைத்த வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் 5 பேரையும் திங்கள்கிழமை ஒரே நாளில் மாநில சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனா். இவா்களுடன் சோ்த்து நிகழாண்டு இதுவரை 48 சைபா் குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் 13 போ் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள். கடந்த 2024-ஆம் ஆண்டு 35 சைபா் குற்றவாளிகள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com