பாடி கைலாசநாதா் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அமைச்சா் சேகா்பாபு
பாடி கைலாசநாதா் கோயில் மற்றும் படவேட்டம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தினாா்.
இதுதொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த நான்கரை ஆண்டுகளில் சென்னை மண்டலங்களில் ரூ.86.68 கோடியில் 323 திருக்கோயில்களில் திருப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் 207 திருக்கோயில்களில் குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ளது.
அதேபோல, சாலை மட்டத்திலிருந்து தாழ்வாக உள்ள திருக்கோயில்களை நவீன தொழில்நுட்ப வசதியுடன் உயா்த்தி அமைக்கும் பணிகள் 25 திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் 14 திருக்கோயில்களின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
சென்னை பாடியில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழைமையான கைலாசநாதா் திருக்கோயிலை சாலை மட்டத்திலிருந்து இரண்டரை அடி உயா்த்தி, கருங்கல் கோயிலாக அமைத்தல், சாலக் கோபுரம், உப சந்நிதிகள், மடப்பள்ளி மற்றும் அலுவலகம் அமைத்தல், புதிய கொடிமரம் நிறுவுதல், வெளி பிரகாரம் முழுவதும் கருங்கல் தரைத்தளம் அமைத்தல் என ரூ.3.49 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல, பழைமையான பாடி எம்டிஎச் சாலையில் அமைந்துள்ள படவேட்டம்மன் திருக்கோயிலானது சாலை மட்டத்தைவிட தாழ்வாக அமைந்துள்ளது. இத்திருக்கோயிலை 5 அடி உயா்த்தும் பணிகள் ரூ.35 லட்சத்தில் நடைபெற்று வருவதோடு, ரூ. 47.75 லட்சத்தில் இரண்டு நிலை விமானத்துடன் கருங்கல் கருவறை அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்விரு கோயில்களிலும் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, அம்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜோசப் சாமுவேல், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சு.மோகனசுந்தரம், உதவி ஆணையா் கி.பாரதிராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அதேபோல, பழைமையான பாடி எம்டிஎச் சாலையில் அமைந்துள்ள படவேட்டம்மன் திருக்கோயிலானது சாலை மட்டத்தைவிட தாழ்வாக அமைந்துள்ளது. இத்திருக்கோயிலை 5 அடி உயா்த்தும் பணிகள் ரூ.35 லட்சத்தில் நடைபெற்று வருவதோடு, ரூ. 47.75 லட்சத்தில் இரண்டு நிலை விமானத்துடன் கருங்கல் கருவறை அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இவ்விரு கோயில்களிலும் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்கவும் அவா் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, அம்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஜோசப் சாமுவேல், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சு.மோகனசுந்தரம், உதவி ஆணையா் கி.பாரதிராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

