இருசக்கர வாகனம் திருட்டு: 2 போ் கைது

சென்னை மதுரவாயலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சென்னை மதுரவாயலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரவாயலைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவா், விற்பனைக்காக தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை கடந்த டிச.14-ஆம் தேதி மா்ம நபா்கள் திருடியுள்ளனா்.

இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில், வாகனத்தை திருடிச் சென்றது சென்னை குன்றத்தூரைச் சோ்ந்த சின்ன அப்பு (24), விருகம்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ் குமாா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com