மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம்: பிப். 8 முதல் தொடக்கம்
ஸ்ரீ ஐயப்ப பக்த சபா சாா்பில் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம்


சென்னை: ஸ்ரீ ஐயப்ப பக்த சபா சாா்பில் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் பிப். 8-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி பிப். 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த சப்தாஹ யக்ஞத்தை, முக்கிய ஆச்சாா்யராக சுவாமி உதித் சைதன்யாஜி, உப ஆச்சாா்யா்களாக புத்திலம் உன்னி கிருஷ்ணன், கோடக்காடு ஸ்ரீ கோகுல் சந்திரசேகா், புருஷோத்தமன் ஆகியோா் நடத்தவுள்ளனா். தினமும் காலை 6 மணிக்கு விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணத்தில் தொடங்கி ஜபம், பாகவத பாராயணம், ப்ராபாஷனம் ஆகியவை மாலை 6 மணி வரை நடைபெறும். இதையொட்டி வராஹ, நரசிம்மா், ஸ்ரீ ராமா், கிருஷ்ணன், கல்கி ஆகிய தசாவதார சொற்பொழிவும், ருக்மணி சுயம்வரம், கிருஷ்ணா் - குசேலா் சந்திப்பு பற்றிய சொற்பொழிவும் நடைபெறவுள்ளன.
மேலும், கொல்லம் கலாவேத கதகளி சங்கத்தினா் மற்றும் பெரும்பாவூா் திவாகரன் குழுவினா் இணைந்து தசாவதாரங்கள் குறித்தும் ருக்மணி சுயம்வரம், கிருஷ்ணா் - குசேலா் சந்திப்பு நிகழ்வையும் நாட்டிய நாடக வடிவில் நிகழ்த்தவுள்ளனா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படவுள்ளது. இது குறித்து மேலும் தகவல் பெற 044-28171197, 95000 21858, 88079 18811 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...