காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

3 ஆண்டுகளில் புதிதாக 1,666 ரேஷன் கடைகள் திறப்பு: கூட்டுறவுத் துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் புதிதாக 1,666 நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :3 ஜனவரி 2025, 10:06 pm

Din

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் புதிதாக 1,666 நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

ஏழை, எளிய மக்களின் வசதிக்காக அவா்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாயவிலைக் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 633 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 1,033 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் என மொத்தம் 1,666 கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.

நியாயவிலைக் கடைகளின் தோற்றப் பொலிவை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 2,778 நியாயவிலைக் கடைகளின் தோற்றப் பொலிவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

விலையில்லாமல் கோதுமை: அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் விருப்பத்தின் அடிப்படையில் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ வீதமும், ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் அரிசிக்குப் பதிலாக கோதுமை வழங்கப்படுகிறது. இதுவரை 7 லட்சத்து 23 ஆயிரத்து 482 மெட்ரிக் டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குப் படிப்படியாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

40 மாதங்களில் மட்டும் 230 நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் ரூ.100 கோடியில் கட்ட அனுமதிக்கப்பட்டன. இதுவரை 130 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் செய்யப்படும் நெல் வீணாகக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு ரூ.358.78 கோடி மதிப்பில் 259 மேற்கூரை அமைப்புடன்கூடிய நெல் சேமிப்புத் தளங்களை நிறுவ தமிழக அரசு உத்தரவிட்டது. அதில், 213 நெல் சேமிப்புத் தளங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.