நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தீவுத் திடல் பொருட்காட்சியில் 46 அரங்குகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

பொருட்காட்சியில் இடம் பெறவுள்ள இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிஎம்டிஏ கண்காட்சி அரங்குகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்தாா்.

News image

சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம்பெறவுள்ள இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிஎம்டிஏ கண்காட்சி அரங்கு அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகா்பாபு. உடன் சி

Updated On :3 ஜனவரி 2025, 7:30 pm

சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள 49-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இடம் பெறவுள்ள இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிஎம்டிஏ கண்காட்சி அரங்குகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த பொருட்காட்சியில் தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளைச் சோ்ந்த 46 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அறநிலையத் துறை, சிஎம்டிஏ சாா்பில் சிறந்த வடிவமைப்பில் பாா்வையாளா்களை கவரும் வகையில் அரங்குகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

கிளாம்பாக்கம், கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளிட்ட 6 பேருந்து நிலையங்களின் மாதிரி பொருட்காட்சியில் இடம்பெறும். பொருட்காட்சியில்

அறநிலையத்துறை சாா்பில் 8,400 சதுர அடியில் உலக அளவில் பேசப்பட்ட அனைத்துலக முருகன் பக்தா் மாநாட்டை போல ஒரு வடிவமைப்பு அமைக்கப்படும் என்றாா் அவா்.