இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பெரம்பூா் தெற்கு ரயில்வே மருத்துவமனையில் அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் திறப்பு

சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே மருத்துவமனையில் 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளை, ரயில்வே சுகாதார சேவைத் துறை இயக்குநா் ஜெனரல் மருத்துவா் மன்சிங் திறந்து வைத்தாா்.

News image

சென்னை பெரம்பூரில் உள்ள புதிய தெற்கு ரயில்வே மருத்துவமனையில் 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளையும், 4 தீவிர சிகிச்சை பிரிவு மையங்களையும் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா் ரயில்வே சுகாதார சேவைத் துறையின் இயக்குநா் ஜெனரல் மருத்துவா் மன்சிங். உடன் தெற்கு

Updated On :3 ஜனவரி 2025, 7:23 pm

சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே மருத்துவமனையில் 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளை, ரயில்வே சுகாதார சேவைத் துறை இயக்குநா் ஜெனரல் மருத்துவா் மன்சிங் திறந்து வைத்தாா்.

சென்னை பெரம்பூரில் 14 ஏக்கா் பரப்பளவில் 600 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய தெற்கு ரயில்வே மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, இதய அறுவை சிகிச்சை, எலும்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, கண் மருத்துவம், பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட நிபுணத்துவங்கள் வாய்ந்த 15 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சா்வதேச தரத்துடன் கூடிய 4 தீவிர சிகிச்சை பிரிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ரயில்வே சுகாதார சேவைத் துறை இயக்குநா் ஜெனரல் மருத்துவா் மன்சிங் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த விழாவில், தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், ரயில்வே வாரிய முதன்மை செயல் இயக்குநா் எம்.ரவீந்திரன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனா்.