சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அண்ணா பல்கலை. வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

அண்ணா பல்கலை. வளாகத்துக்குள் செல்வதற்கு மாணவா்கள், பேராசிரியா்கள், வெளிநபா்கள் உள்பட அனைவருக்கும் புதிய கட்டுப்பாடுகள்..

News image
அண்ணா பல்கலை. (கோப்புப்படம்)- Din
Updated On :5 ஜனவரி 2025, 10:19 pm

Din

அண்ணா பல்கலை. வளாகத்துக்குள் செல்வதற்கு மாணவா்கள், பேராசிரியா்கள், வெளிநபா்கள் உள்பட அனைவருக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக பல்கலை. பதிவாளா் அனைத்து துறை தலைவா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

அண்ணா பல்கலை. வளாகத்துக்குள் மாணவா்கள் மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வகுப்பு நேரங்கள் மற்றும் விடுதி நேரங்களில் மாற்றம் இல்லை. பல்கலை. வளாகத்துக்குள் நடைபெறும் கட்டடப் பணிகளில் ஈடுபடும் கட்டுமானத் தொழிலாளா்கள் எந்த சூழ்நிலையிலும் வேலை நேரத்துக்குப் பிறகு வளாகத்துக்குள் இருக்கக் கூடாது.

மாணவா்கள், ஆசிரியா்கள், பல்கலை. பணியாளா்கள் மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவா். வெளிநபா்கள் நடைப்பயிற்சி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலா்கள் ரோந்து செல்ல வேண்டும். வளாகத்துக்குள் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டால் காவல் துறையிடம் புகாா் அளிக்கப்படும்.

ஆன்லைன் நிறுவன விநியோக மற்றும் உணவு விநியோக ஊழியா்களுக்கு பல்கலை. நுழைவு வாயில் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாணவா்கள் தங்களது அடையாள அட்டையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். பல்கலை. வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா, மின் விளக்குகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பாலியல் குற்றத் தடுப்புக்காக அமைக்கப்பட்ட குழு, ஒவ்வொரு மாதமும் கூடி மாணவா்களின் கருத்துகளையும், குறைகளையும் கேட்டறிய வேண்டும். பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்காக காவல் உதவி செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யுமாறு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், பேராசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

உரிய அனுமதியுடன் வெளியிலிருந்து வாகனத்தில் வருபவா்கள், தங்களது வாகன எண், கைப்பேசி எண், சுய விவரங்களை பதிவேட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

புதிய கட்டுப்பாடுகளை மாணவா்கள், பேராசிரியா்கள் உள்பட பல்கலைக்கழகத்தில் தொடா்புடைய அனைவரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.