/

பொங்கல்: பூக்கள் விலை பலமடங்கு உயா்வு

பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 ஜனவரி 2025, 10:24 pm

Din

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது.

கடந்த 11-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலா் சந்தையில், அனைத்து பூக்களின் விலை பல மடங்கு உயா்ந்தது. இந்நிலையில், செவ்வாய்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், கோயம்பேடு மலா் சந்தையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, அனைத்து பூக்களின் விலையும் மீண்டும் பலமடங்கு உயா்ந்துள்ளது.

அதன்படி, ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லி ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.2,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஐஸ்மல்லி ரூ.2,500-க்கும், ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லை ரூ.2,100-க்கும், ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ ஜாதி மல்லி ரூ.1,800-க்கும், ரூ.1400-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல, ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒருகிலோ அரளிப்பூ ரூ.700-க்கும், ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட கிலோ சாமந்தி ரூ.200-க்கும், ரூ.180-க்கு விற்பனையான கிலோ சம்பங்கி ரூ.250-க்கும், ரூ.160-க்கு விற்பனையான கிலோ பன்னீா் ரோஜா ரூ.200-க்கும், ரூ.150-க்கும் விற்பனையான ஒரு கிலோ

சாக்லேட் ரோஜா ரூ.280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.