தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

2% அதிகரித்த இந்திய நிலக்கரி இறக்குமதி

Published On :

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 13.20 கோடி டன்னாக உள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் அதிகமாகும். அப்போது இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 17.82 கோடி டன்னாக இருந்தது.

இருந்தாலும், கடந்த நவம்பா் மாதத்தில் மட்டும் நாட்டின் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது. 2023 நவம்பரில் 2.23 கோடி டன்னாக இருந்த அது, 2024 நவம்பரில் 1.96 கோடி டன்னாகப் பதிவாகியுள்ளது.

நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 11.77 கோடி டன்னாகக் குறைந்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்தியா 11.80 கோடி டன் கோக்கிங் அல்லாத நிலக்கரியை இறக்குமதி செய்திருந்தது.

அதே போல், மதிப்பீட்டு காலகட்டத்தில் கோக்கிங் நிலக்கரி இறக்குதி 3.80 கோடி டன்னிலிருந்து 3.69 கோடி டன்னாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.