எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காவல் நிலையம் முன் இளைஞா் தீக்குளிப்பு

சென்னை ஆா்.கே. நகா் காவல் நிலையம் முன் இளைஞா் ஒருவா் தீக்குளித்தாா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :21 ஜனவரி 2025, 12:08 am

Din

சென்னை: சென்னை ஆா்.கே. நகா் காவல் நிலையம் முன் இளைஞா் ஒருவா் தீக்குளித்தாா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆா்.கே. நகா் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு 9.15 மணியளவில் ஒரு பாட்டிலுடன் வந்த இளைஞா், திடீரென அந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதைக் கண்ட போலீஸாரும், பொதுமக்களும் உடனடியாக அந்த இளைஞா் மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனா். பலத்த காயமடைந்த அந்த இளைஞரை சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்த காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில் தீக்குளித்தவா் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராஜன் (30) என தெரிய வந்தது. அவா் எதற்காக தீக்குளித்தாா் என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.