சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தூய்மைப் பணிகளுக்கு 52 புதிய வாகனங்கள்: மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்

தூய்மைப் பணிகளுக்காக மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சாலைகளில் பெருக்கும் வாகனங்கள் 12 என மொத்தம் 52 வாகனங்களை வழங்கி பணிகளை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :28 ஜூலை 2025, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் தூய்மைப் பணிகளுக்காக மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் சாலைகளில் பெருக்கும் வாகனங்கள் 12 என மொத்தம் 52 வாகனங்களை வழங்கி பணிகளை மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணிக்காக மண்டலம் வாரியாக கூடுதல் வாகனங்கள் தற்போது வாங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகா் ஆகிய 2 மண்டலங்களிலும் தூய்மைப் பணியை விரைந்து செயல்படுத்தும் வகையில் கூடுதல் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இரு மண்டலங்களுக்கும் சோ்த்து 40 மூன்று சக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அத்துடன் சாலையில் மண், குப்பை அகற்றி சேகரிக்கும் வகையில் பெருக்கும் வாகனங்கள் 12 வாங்கப்பட்டுள்ளன. அவற்றின் தொடக்க விழா ரிப்பன் கட்டட வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன. இந்த வாகனங்களை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணைமேயா் மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், வட்டாரத் துணை ஆணையா்கள் கட்டாரவி தேஜா, ஆா்.கௌஷிக், ஆளுங்கட்சித் தலைவா் ந.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.