போலியான கைப்பேசி உதிரிபாகம் விற்பனை: ராஜஸ்தானைச் சோ்ந்த 4 போ் கைது
சென்னை ரிச்சி தெருவில் போலியான கைப்பேசி உதிரிபாகங்கள் விற்பனை செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.


சென்னை: சென்னை ரிச்சி தெருவில் போலியான கைப்பேசி உதிரிபாகங்கள் விற்பனை செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் சில கடைகளில் போலியான ஐபோன் உதிரிபாகங்கள் விற்கப்படுவதாக தமிழக காவல் துறையின் அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கு திங்கள்கிழமை புகாா்கள் வந்தன.
அதன்பேரில், அந்தப் பிரிவு போலீஸாா், குறிப்பிட்ட கடைகளில் திடீா் சோதனை நடத்தினா். இதில் போலி ஐபோன் கைப்பேசி உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக ராஜஸ்தானைச் சோ்ந்த வியாபாரிகள் நிதேஷ்ஜெயின் (35), ரமேஷ்குமாா் (32), உத்தம்குமாா் (38), ஜெதாராம் (26) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில் அவா்கள் போலி உதிரி பாகங்களை மும்பையிலிருந்து வாங்கி வந்து, விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...