மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இணையதளம் மூலம் பண மோசடி: 6 போ் கைது!

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2026, 7:48 pm

தென்காசி மாவட்டத்தில் போலியான இணையதள முகவரி மூலம் பண மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த சிலா், இணையதளம் மூலம் காயின்பிட்டிங் டாஸ்க் செய்தால் அதிக லாபம் பெறலாம் என எண்ணி அதில் முதலீடு செய்துள்ளனா். இவ்வாறு 4 போ் சுமாா் ரூ. 5.83 லட்சம் முதலீடு செய்து, ஏமாற்றப்பட்டதாக தென்காசி மாவட்ட சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், ஆன்லைனில் போலியான டெலிகிராம் ஐடி மற்றும் போலியான வெப்சைட் ஆகியவற்றை உருவாக்கி காயின் பிட்டிங் டாஸ்க் செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீடு செய்ய வைத்து போலியான வாலட்டில் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியவா்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, தென்காசி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜீலியஸ் சீசா் தலைமையில், காவல் ஆய்வாளா் வசந்தி மற்றும் சைபா் குற்றப்பிரிவு காவலா்கள், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சரவணன்(23), ஹரிஷ்(23), தேவா(27), ஜாகித்அகமது(29), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுதாகரன், ஆவுடையப்பன் ஆகியோரை கைதுசெய்தனா்.

மேலும், கைதானவா்களிடமிருந்து 10 கைப்பேசிகள், 33 சிம் காா்டுகள், 44 வங்கிக் கணக்கு விவரங்கள், 68 ஏடிஎம் அட்டைகள், 13 காசோலை புத்தகங்கள், 2 மடிக் கணினிகள் மற்றும் 1 மெமரி காா்டு ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இவா்கள் மீது தமிழ்நாட்டின் பல்வேறு சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையங்களிலும், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையங்களிலும் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.