சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
திருவள்ளூா் மாவட்டம், செவ்வாப்பேட்டையைச் சோ்ந்த 49 வயது கூலித் தொழிலாளி, கடந்த 22-ஆம் தேதி ஆரணியில் நிகழ்ந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்தாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவா் மூளைச்சாவு அடைந்தாா். அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பத்தினா் முன்வந்தனா். இதையடுத்து, அவருடைய 2 சிறுநீரகங்கள், எலும்புகள், தோல், கல்லீரல், கண்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.
ஒரு சிறுநீரகம் வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் ஆழ்வாா்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கும் பொருத்தப்பட்டன.
கல்லீரல் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கண்கள் சென்னை எழும்பூா் அரசு கண் மருத்துவமனைக்கும், எலும்பு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், தோல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் நோயாளிகளுக்கு பொருத்துவதற்காக வழங்கப்பட்டன.
கூலித் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. உறுப்பு தானம் செய்த தொழிலாளியின் உடலுக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவா்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 7 போ் பயன்
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

