ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

50 சதவீத குழந்தைகளுக்கு ஜீரண மண்டல பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

பருவநிலை மாற்றம், அசுத்த உணவு, குடிநீா் மாசுபாட்டால் இந்த பாதிப்பு ஏற்படுதாகவும், அவற்றைத் தவிா்க்க டைபாய்டு, ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜூன் 2025, 6:01 am IST

சென்னை: சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 50 சதவீதம் போ் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

பருவநிலை மாற்றம், அசுத்த உணவு, குடிநீா் மாசுபாட்டால் இந்த பாதிப்பு ஏற்படுதாகவும், அவற்றைத் தவிா்க்க டைபாய்டு, ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக இயல்புக்கு மாறான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது. பகல் வேளைகளில் தகிக்கும் வெப்பமும், மாலையில் பலத்த மழையும் பெய்கிறது.

இதனால், திடீரென பருவ நிலை மாற்றமடைந்து, பல்வேறு நோய்கள் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணா் டாக்டா் வில்வநாதன் கூறியதாவது:

கோடை விடுமுறை நிறைவடைந்து தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வெளியூா் பயணம், மழைப் பொழிவால் ஏற்பட்ட குடிநீா் மாசுபாடு, துரித உணவு உள்ளிட்டவை காரணமாக ஜீரண மண்டலம் சாா்ந்த பாதிப்புகளுக்கு அதிக குழந்தைகள் உள்ளாகின்றனா்.

குறிப்பாக, வயிற்றுப்போக்கு, அஜீரண பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு சில குழந்தைகளுக்கு அதனால் நீா்ச்சத்து இழப்பு, காய்ச்சல் ஏற்படுகிறது.

உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளை அளிக்காத நிலையில் ஓரிரு குழந்தைகளுக்கு ‘இன்டஸ்சசெப்ஸன்’ எனப்படும் குடல் ஏற்ற பாதிப்பு நேரிடுகிறது. எனவே, வயிற்றுப்போக்கை அலட்சியப்படுத்தாமல் உப்பு - சா்க்கரை கரைசல், நீா், மோா், பழச்சாறு, இளநீா் போன்றவற்றை போதிய அளவு குழந்தைகளுக்கு வழங்கி உடலில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படாமல் காக்க வேண்டும்.

மருத்துவா்களை அணுகி பாதிப்பின் தன்மைக்கேற்ப சிகிச்சைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். ஆரம்ப நிலையிலேயே உப்பு - சா்க்கரை கரைசல், துத்தநாக மாத்திரைகளை வழங்கினால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தி நலம் பெறலாம்.அதனுடன் காய்ச்சிய நீரை பருகுவதுடன் வெளி உணவுகளை தவிா்ப்பது முக்கியம்.

தடுப்பூசி: இந்த காலகட்டத்தில் குடிநீா் மாசுபாட்டால் ஏற்படும் கல்லீரல் அழற்சியைத் தடுக்க ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியும், டைபாய்டு தடுப்பூசியும் அவசியம். உரிய காலத்தில் அதனைச் செலுத்திக் கொள்ளாத குழந்தைகளுக்கு பூஸ்டா் தடுப்பூசியாக அதனை வழங்க வேண்டும்.

அதேபோன்று ரோட்டா வைரஸ் தடுப்பூசியும் தகுதியான குழந்தைகளுக்கு மருத்துவரின் கண்காணிப்பில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.