ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

குடிநீா் விநியோகம் பாதிப்பு: கூடலூா் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கூடலூா் கண்ணகிநகரில் கடந்த 6 மாதங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

News image

கூடலூா் கண்ணகிநகா் பகுதியில் ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தியிடம், குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதாக முறையிட்ட பெண்கள்.

Updated On :11 ஜூன் 2026, 1:51 am IST

கூடலூா் கண்ணகிநகரில் கடந்த 6 மாதங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சி கண்ணகிநகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு செல்லும் குடிநீா்க் குழாய், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஓடை சீரமைப்புப் பணிக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்காலிக குழாய் இணைப்பு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், குடிநீருடன் கழிவுநீா் கலந்து வந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதன்கிழமை கூடலூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா். ஓடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அடுத்த 10 நாள்களுக்கு தற்காலிக இணைப்பு மூலம் காலை நேரங்களில் குடிநீா் வழங்கப்படும் என்றும், பணிகள் நிறைவடைந்ததும் நிரந்தரமாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.