ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

விவசாயிகள் வருவாயைப் பெருக்க நடவடிக்கை: வேளாண் வணிகத்தை உலகளவில் ஊக்குவிக்க அரசுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை ஐஐடி - தமிழ்நாடு அரசு இடையே வேளாண்மை துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னையிலுள்ள ஐஐடியுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் - படம்| சென்னை ஐஐடி பதிவு

Published On :

தமிழ்நாடு வேளாண் வணிகம் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஏற்றுமதி கழகத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று(ஜூன் 17) ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் அதுல் ஆனந்த், சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, சென்னை ஐஐடி மேலாண்மை படிப்புகள் துறைசார் பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இதன்மூலம், புத்தாக்கத்துடன் உலகளாவிய போட்டியை சமாளிக்கும் விதத்தில் தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளை மேலும் ஊக்கப்படுத்த வழிவகை செய்யப்பட உள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இதன் முக்கிய அம்சங்களாக:

  • வேளாண் வணிகம் குறித்து ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்த்தல்

  • பயிர் விளைச்சலில் நஷ்டம் ஏற்படுவதை தவிர்த்தல், விநியோகச் சங்கிலியை ஒழுங்குமுறைப்படுத்துதல்

  • சந்தை அணுகுமுறைகளை மேம்படுத்துதல். அதேபோல, ஏற்றுமதி திறனையும் மேம்படுத்துதல்

  • வேளாண் பொருள்களை விளம்பரப்படுத்துதல், அவற்றின் பேக்கேஜ் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல செயல்முறைகள் கடைப்பிடிக்கப்படும்.

இவற்றை இலக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக தொழில்முனைவோர்களையும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும் ஊக்கப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.