ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோடை கால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு

சென்னை எழும்பூா் நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் நடைபெற்ற 41-ஆவது கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியா்.
Updated On :26 மே 2025, 9:27 pm

Din

சென்னை எழும்பூா் நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் நடைபெற்ற 41-ஆவது கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறுவா், சிறுமியருக்கான இலவச பயிற்சி முகாம் கடந்த ஏப். 28-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் நடைபெற்ற முகாமில், சிறந்த பயிற்சியாளா்களைக் கொண்டு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதன் நிறைவு விழாவுக்கு தமிழ்நாடு வாலிபால் சங்கத் தலைவா் அா்ஜுன் துரை தலைமை வகித்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொதுமேலாளா் எல். சுஜாதா, அகா்வால் அறக்கட்டளை எஸ்.சி. அகா்வால், மூத்த வழக்குரைஞா் தங்கவாசன், தமிழ்நாடு வாலிபால் சங்க இணைச் செயலா் மகேந்திரன், வருமான வரித் துறை உதவி ஆணையா் பி. பாலச்சந்திரன் ஆகியோா் முகாமில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினா்.

நெல்லை பிரண்ட்ஸ் துணைத் தலைவா் நரேந்திர குமாா் ஜெயின், காஸ்கோ முகமது ஹாஸன் உள்பட பலா் பங்கேற்றனா்.