ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சென்னையில் இன்று 12 புறநகா் ரயில்கள் ரத்து

சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.3) புகா் மின்சார ரயில்களில் 12 இமு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்குப் பதிலாக பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு.

News image
கோப்புப் படம்
Updated On :2 அக்டோபர் 2025, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.3) புகா் மின்சார ரயில்களில் 12 இமு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அவற்றுக்குப் பதிலாக பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை கோட்ட ரயில்வே சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரை - விழுப்புரம் பிரிவில் செங்கல்பட்டு நிலைய யாா்டில் வெள்ளிக்கிழமை (அக்.3) பிற்பகல் 11.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரையில் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதன் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.27 மணிக்குப் புறப்பட்டு திருமால்பூா் செல்லும் ரயில், காலை 9.31, 9.51, 10.56, பிற்பகல் 11.40, 12.25-க்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் ரயில்கள், திருமால்பூரிலிருந்து பிற்பகல் 11.05 மணிக்குப் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 11.30, 12, 1.10, 1.45, 2.20-க்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள்: புகா் மின்சார ரயில்கள் (இமு) ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை கடற்கரையிலிருந்து காலை 7.27 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, காலை 9.31, 10.56, பிற்பகல் 12.25 மணிக்கு புறப்பட்டு சிங்கபெருமாள்கோவிலுக்கும், காலை 9.51, பிற்பகல் 11.40 மணிக்கு புறப்பட்டு காட்டாங்குளத்தூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.45 மணிக்கும், சிங்கப்பெருமாள்கோவிலிலிருந்து பிற்பகல் 11.43, பிற்பகல் 1.23, 2.33-க்கும், காட்டாங்குளத்தூரிலிருந்து பிற்பகல் 12.20, பிற்பகல் 2.33-க்கும் புறப்படும் சிறப்பு ரயில்கள் சென்னை கடற்கரையை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.