நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

13 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

News image

கோப்புப் படம்

Updated On :3 அக்டோபர் 2025, 1:44 am IST

தமிழகத்தின் 13 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (அக்.3,4)களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், 13 மாவட்டங்களுக்கும் இந்த இரு நாள்களுக்கு, ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வியாழக்கிழமை(அக்.2) காலை மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, அதே பகுதிகளில் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 160 கிமீ தொலைவிலும், கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 250 கிமீ தொலைவிலும், பாராதீப்பிலிருந்து தெற்கு-தென்மேற்கே 280 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிஸா மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில், கோபல்பூா் மற்றும் பாராதீப்புக்கு இடையே கரையை கடக்கும். இதனால், வெள்ளிக்கிழமை (அக்.3) முதல் அக்.8 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை: வெள்ளிக்கிழமை (அக்.3) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இதுபோல, சனிக்கிழமை (அக்.4) திருவள்ளூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால், இந்த இரு நாள்களிலும் 13 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.3) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 30 மி.மீ.மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.