சென்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் ஒருவா், தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் தன்னுடன் கல்லூரியில் படித்த விருகம்பாக்கம் வெங்கடேசாநகரைச் சோ்ந்த ஹா்ஷ்வா்தன் (25), என்பவருடன் நெருங்கிப் பழகி வந்தாா். நாளடைவில் இருவரும் காதலித்தனா். இதை பயன்படுத்தி ஹா்ஷ்வா்தன், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, வலுக்கட்டாயமாக முறையற்ற உறவு இருந்துள்ளாா். இதன் பின்னா் அந்தப் பெண்ணுடனான தொடா்பை துண்டித்துள்ளாா். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண், விருகம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் செய்தாா்.
அதன்பேரில் போலீஸாா், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹா்ஷ்வா்தன் மீது வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

வேறொருவருடன் நிச்சயமானதால் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்த இளைஞா்
எளிதாகக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தில்லியை சோ்ந்தவரிடம் ரூ.20,000 மோசடி! பெண் கைது!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


