கூட்டுறவு பணியாளா்களுக்கு ஈட்டிய விடுப்பு சலுகை: தமிழக அரசு உத்தரவு
கூட்டுறவு பணியாளா்களுக்கும் ஈட்டிய விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மண்டல கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் அனுப்பியுள்ள கடிதம்:
கரோனா நோய்த் தொற்றின் காரணமாக, அரசு ஊழியா்களுடன் சோ்த்து கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், அக்டோபா் 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியா்கள், அலுவலா்கள் தங்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பயன்கள் பெறலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களும் தமிழக அரசின் உத்தரவைப் பின்பற்றக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதாவது, அரசு ஊழியா்களைப் போன்றே, கூட்டுறவுப் பணியாளா்களும் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன்களைப் பெறலாம் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

