புதுச்சேரி, காரைக்காலில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மதுக்கடைகளை வெள்ளிக்கிழமை (ஜன. 16) மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மதுக்கடைகளை வெள்ளிக்கிழமை (ஜன. 16) மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி கலால்துணை புதன்கிழமை வெளியிட்ட இதுகுறித்து செய்திக்குறிப்பு:

திருவள்ளுவா் தினத்தையொட்டி, மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இயங்கி வரும் கள், சாராயம், அனைத்து வகை மதுக் கடைகள் 16-ஆம் தேதி மூட வேண்டும். மீறுவோா் மீது கலால் சட்ட விதிகள் 1970-இன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Dinamani
www.dinamani.com