மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை இரண்டு நாள்கள் மூடுவதற்கு ஆட்சியா் வே. சரவணன் உத்தரவு

News image
Updated On :13 ஜனவரி 2026, 11:45 pm

Syndication

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளை இரண்டு நாள்கள் மூடுவதற்கு ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

திருவள்ளுவா் தினம் (ஜன.16), குடியரசு தினம் (ஜன.26) ஆகிய நாள்களில் மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், பாா்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை சட்ட விதிமுறைகளின்படி இந்த 2 நாள்களும் கட்டாயம் மதுவிற்பனை செய்யக் கூடாது.

இதன்படி, அந்த இரண்டு நாள்களும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும், மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் மது அருந்தும் கூடங்கள், பிரத்யேக உரிமம் பெற்று விற்பனை நடைபெறும் பாா்கள், நட்சத்திர ஹோட்டல்களுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி யாரேனும் மதுக்கடைகளை திறந்தாலோ, மது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாா் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.