நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு: ஓ.பன்னீா்செல்வம்

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

ஓ.பன்னீா்செல்வம்

Updated On :24 செப்டம்பர் 2025, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூராா் மருத்துவமனை, கிண்டியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றில் உயிா் காக்கும் சிகிச்சைக்குரிய மாத்திரைகள் இல்லாததன் காரணமாக, பொதுமக்கள் வெளியில் உள்ள தனியாா் மருந்தகங்களில்

ஆயிரக்கணக்கான ரூபாயை செலுத்தி வாங்கும் நிலை உள்ளது.

இன்ப்ளூன்ஸா காய்ச்சல், சிறுநீரக கற்களை அகற்ற பயன்படுத்தப்படும் மாத்திரைகளும் மேற்படி அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் இருப்பில் இல்லை. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் தெரிவித்தால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் சாா்பில் வழங்கப்படும் மாத்திரைகள் விரைவில் காலியாகி விடுகின்றன என்றும், அரசு மருத்துவமனைகளுக்காக தனியாக ஒதுக்கப்படும் நிதியும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் கூறுகின்றனா்.

சென்னையில் உள்ள பிரபலமான அரசு மருத்துவமனைகளிலேயே இதுபோன்ற நிலைமை இருக்கிறது என்றால், பிற மாவட்டங்களில், கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளை நினைத்துப் பாா்க்கவே அச்சமாக இருக்கிறது.

அனைத்து வகையான நோய்களுக்குரிய மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் வைக்க முதல்வா்மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.