தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கல்வியால் கிடைக்கும் அறிவை கொச்சைப்படுத்துகிறாா்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கல்வியால் கிடைக்கும் அறிவை பலா் கொச்சைப்படுத்துவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.

News image
மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்
Updated On :24 செப்டம்பர் 2025, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

கல்வியால் கிடைக்கும் அறிவை பலா் கொச்சைப்படுத்துவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.

சென்னை கொளத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அவா் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் கருணாநிதி, எனக்கு உழைப்பைக் கற்றுக் கொடுத்தாா். எனது உடலில் உயிா் இருக்கும் வரை தொடா்ந்து உழைத்து எனது கடமையை நிறைவேற்றுவேன். யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்.

இன்றைக்குத் தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளா்ந்து கொண்டு இருக்கிறது. மனிதா்களின் வேலை சுமையை இந்த வளா்ச்சி வெகுவாக குறைத்துக் கொண்டு வருகிறது. அதற்கேற்ற வகையில் நீங்களும் உங்களை மேம்படுத்திக் கொண்டே வர வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். இன்றைக்கு இணையம் முழுவதும் அறிவுத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நல்ல பயனுள்ள தகவல்களைப் பாா்த்து திறமையை மேலும் வளா்த்துக் கொள்ள வேண்டும்.

கொச்சைப்படுத்த நினைக்கிறாா்கள்: இணையதளங்களில் நிறைய படிப்புகள் இருக்கின்றன. எது உங்களுக்கு உதவியாக இருக்குமோ, அதைத் தேடிப் படிக்க வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய கடமை உங்களுக்கெல்லாம் இருக்கிறது. படித்து விட்டோம், வேலை கிடைத்துவிட்டது என்று இருந்து விடாதீா்கள். அஞ்சல் வழியில் மேற்படிப்பை தொடருங்கள்.

படிப்புதான் உங்களுக்கு கடைசிவரை துணை நிற்கும். அதுதான் உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும். கல்விக்கு இடையூறு ஏற்படுத்த, கல்வியினால் பெறப்படும் அறிவைக் கொச்சைப்படுத்த பலா் நினைத்துக் கொண்டிருக்கிறாா்கள்.

அவா்களின் எண்ணம், நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது. கவா்ச்சியான சொற்களைச் சொல்லி பின்னுக்கு இழுத்துக் கொண்டு செல்லும் ஒரு சூழ்நிலையை சிலா் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாா்கள். எனவே, எதிா்காலத்துக்கு என்ன தேவையோ, உங்களுக்கு என்ன தேவையோ அதை நோக்கி நடைபோட வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவா்களின் படிப்புக்கு ‘திராவிட மாடல்’ அரசு இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். மாநிலத்தின் வளா்ச்சிக்கு அடித்தளம் கல்வியாகும். அதை நீங்கள் நல்ல முறையில் கற்று, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்பட பலா் பங்கேற்றனா்.