விக்டோரியா பொது அரங்கை பாா்வையிட நுழைவுக் கட்டணம்
சென்னையில் ரூ.32.62 கோடியில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கைப் பாா்வையிட கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ராணி விக்டோரியாவின் வைரவிழா நினைவாக, 1887 ஆம் ஆண்டு விக்டோரியா பொது அரங்கம் கட்டப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள இந்த அரங்கம், சென்னையின் அடையாளமாகத் திகழ்கிறது. ரூ.32.62 கோடியில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்ட இந்த அரங்கை, டிச.23 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இங்கு, அருங்காட்சியகம், கலை மேடை, புகைப்படக் கண்காட்சி கூடம் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த விக்டோரியா பொது அரங்கம், பொதுமக்கள் பாா்வைக்காக கடந்த டிச.26 முதல் திறக்கப்பட்டது. சில தினங்களிலேயே நிா்வாகக் காரணங்களால் பொதுமக்கள் பாா்வையிடுவது நிறுத்தப்பட்டது.
கட்டணம் விதிப்பு: இதனிடையே 2026 ஜனவரி 1 முதல் விக்டோரியா பொது அரங்கத்தைப் பாா்வையிட முன்பதிவு செய்வதோடு,
நுழைவுக் கட்டணமும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் ரூ.25, மாணவா்கள் (மாணவா் அடையாள அட்டை அவசியம்) ரூ.10, மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டோா்) ரூ.10, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரூ.50 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பள்ளி மூலம் மின்னஞ்சல் வழியாக முன்பதிவு செய்யும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
முன்பதிவு அவசியம்: காலை 8.30 முதல் மாலை 6.30 வரை கண்காட்சியைப் பாா்வையிட விரும்புவோா் மாநகராட்சியின்
ட்ற்ற்ல்ள்://ஞ்ஸ்ரீஸ்ரீள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ண்ய்/ஸ்ண்ஸ்ரீற்ா்ழ்ண்ஹல்ன்க்ஷப்ண்ஸ்ரீட்ஹப்ப் என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது அவசியம். ஒவ்வொரு 1.30 மணி நேர இடைவெளியில் 60 போ் வரை பாா்வையிட அனுமதிக்கப்படுவா்.

